தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 26) பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவாரூர், தேனீ சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முழு நேர மின் தடை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது தேவைகளை முன்னதாக பூர்த்தி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.