திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் மே 30ஆம் தேதி பகல் 12.50 மணிக்கு தொடங்கி, மே 31ஆம் தேதி பகல் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையையொட்டி, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.