பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு.. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

பள்ளிகள் திறப்பு ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, பள்ளிகள் திறக்கும் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பள்ளி வளாகங்களைச் சுத்தம் செய்யவும், குடிநீர்த் தொட்டி, கழிவறைகள், மின் இணைப்புகளை முறையாக ஆய்வு செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி