தொகுதி 2, 2ஏ தேர்வின் 828 பணிகளுக்காக இன்று (பிப்.7) நடைபெற இருந்த முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த குளறுபடிகளுக்கு இளநிலை அதிகாரிகளை பலிகடா ஆக்காமல், விசாரணை நடத்தி டிஎன்பிஎஸ்சியின் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.