அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்தில் (MIS) கணவன்-மனைவி இணைந்து கூட்டு கணக்கு தொடங்குவதன் மூலம் மாதந்தோறும் ரூ.9,250 வரை வருமானம் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும் என்பதோடு, ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகள் முதிர்வுக்காலம் கொண்ட இத்திட்டத்தில், ரூ.15 லட்சம் முதலீட்டிற்கு வட்டியாக மட்டும் மொத்தம் ரூ.5.55 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.