ஆஸ்திரேலியாவில் மசாஜ் பார்லரில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளி மசாஜ் தெரபிஸ்ட் சுமித் சதீஷ் ரஸ்தோகி (39) என்பவருக்கு 61 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22 காலகட்டத்தில் பெண்களுக்கு தொல்லை கொடுத்து, அதை ஆபாச வீடியோவாக எடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.