ஆபாச வீடியோ.. யூடியூப் தம்பதி மீது சைபர் கிரைம் புகார்

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் நவேஷ் ராஜ், கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில் யூடியூப் பிரபல தம்பதி கிருஷ் - ஐஷ்வர்யா மீது ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கிருஷ் மற்றும் ஐஷ்வர்யா ரகு தம்பதி, தங்களின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமான கருத்துகளை வெளியிட்டுள்ளதாக கூறி நடவடிக்கை கேட்டு புகார் அளித்துள்ளார். மேலும், ‘அவர்களது வீடியோக்களை யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி