மக்கள் தொகை கணக்கெடுப்பு.. தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகளுக்கு தமிழகத்தில் முன் சோதனை பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன் சோதனை வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், மக்கள் சுயமாக கணக்கெடுப்பு செய்துகொள்வதற்கான முன்சோதனை பணி நவம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், பிரதான கணக்கெடுப்பிற்கு முன்னர் செயல்முறைகள் சரிபார்க்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி