மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ அரசாணையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடந்த 2021இல் நடக்க வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.