விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பொன்னி' சீரியல் மூலம் பிரபலமான நடிகர் சபரி நாதன், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதாக கூறியிருக்கும் அவர், அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். மேலும், தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்பப் போவதாகவும் கூறியுள்ளார்.