மார்வல் படமான 'ஃபெண்டாஸ்டிக் ஃபோர்' திரைப்படங்களில் டாக்டர் டூம் வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜூலியன் மெக்மஹோன் (56). புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் கடந்த புதன்கிழமை (ஜூலை 2) அமெரிக்காவின் புளோரிடாவில் உயிரிழந்ததாக அவரது மனைவி கெல்லி மெக்மஹோன் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜூலியன் மெக்மஹோன், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் வில்லியம் மெக்மஹோநின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.