போப் பிரான்சிஸ் சுவாசத்தொற்று காரணமாக கடந்த 14ஆம் தேதி ரோம் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 12 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை குறித்து வாடிகன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், போப்பின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், எனினும் இரட்டை நிமோனியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.