சர்க்கரை நோயாளிகள் பாப்கார்னை தாராளமாக, ஆனால் அளவோடு சாப்பிடலாம் என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்னில் குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து மற்றும் மிதமான கிளைசிமிக் இன்டெக்ஸ் (55) இருப்பதால், இது ரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இருப்பினும், கடைகளில் விற்கப்படும் வெண்ணெய், அதிக உப்பு, மசாலா அல்லது கேரமல் சேர்க்கப்பட்ட பாப்கார்ன்களை தவிர்த்துவிட்டு, எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுக்கப்படும் பாப்கார்னை சாப்பிடலாம்.