காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர் ஆந்திரா தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதாக போலீசார் சந்தேகிக்கும் நிலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (ஜூன். 16) அவசர வழக்காக விசாரிக்கப்படுகிறது.