சொந்த ஊரிலிருந்து திரும்பும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொடர் விடுமுறையால் சென்னையில் வசித்த தென்மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மக்கள் இன்று முதல் சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள், வேன்கள் எனப் பல்வேறு வாகனங்கள் சென்னை நோக்கிப் படையெடுத்து வருகின்றன. இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

தொடர்புடைய செய்தி