பொங்கல் சிறப்பு ரயில்.. டிக்கெட்டுகள் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள் சென்னை திரும்ப வசதியாக தெற்கு ரயில்வே அறிவித்த நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயில் வரும் 18 ஆம் தேதி இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரம் வரும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு சில நிமிடங்களில் முடிவடைந்ததால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி