முதல்வரின் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்றும் வரும் ஆண்டில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் கீதா ஜீவன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும்.