பொங்கல் உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழா - பிரதமர் வாழ்த்து

டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் "ஒரே பாரதம் உன்னத பாரதம்" கருப்பொருளில் பொங்கல் விழா இன்று (ஜன.14) நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய திருவிழாவாக உருவெடுத்துள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார். மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையேயான உன்னத தொடர்பை இப்பண்டிகை பறைசாற்றுவதாக அவர் புகழாரம் சூட்டினார்.

தொடர்புடைய செய்தி