பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (நவ.15) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ஜனவரி 14-ஆம் தேதி (போகிப் பண்டிகை) பயணம் செய்வதற்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது; ஜனவரி 14 முதல் தொடர்ந்து 4 நாட்களுக்குப் பொங்கல் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஜனவரி 13-ஆம் தேதி பயணத்திற்கான முன்பதிவு இன்று காலை தொடங்கிய 10 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.