பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 2 கோடியே 9 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு செய்யப்பட்டுள்ளது. டோக்கன் தேதிகளில் பரிசுத் தொகுப்பை வாங்கத் தவறியவர்கள் இன்று (ஜன., 14) ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், கைரேகை சரியாக பதிவாகாத முதியவர்களுக்கு கண் கருவிழி மூலம் சரிபார்த்து பரிசுத் தொகுப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.