பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. அத்துடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த முறை பொங்கள் பரிசுப் பொருட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. அதேபோல் பணமும் வழங்கவில்லை. இந்நிலையில், 2026 பொங்கல் என்பது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வருவதால், தமிழக மக்களை கவரும் வகையில் பணம் மற்றும் கூடுதல் பரிசுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.