பொங்கல் பண்டிகை: 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் கூட்டம் நேற்று (ஜன., 14) அலைமோதியது. எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் நிற்கக்கூட இடமின்றி பயணிகள் பயணம் செய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ரயில், அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், கார்கள், டாக்ஸிகள், இருசக்கர வாகனங்கள் என மொத்தம் சுமார் 5 லட்சத்து 45 ஆயிரத்து 700 பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி