தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாள் விடுமுறை முடிவில் மது விற்பனை ரூ.900 கோடியை எட்டும் என கணிக்கப்படுகிறது. ஜன.14,15 ஆகிய 2 நாட்களில் மட்டும் சுமார் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மாநில பொருளாதார வளர்ச்சியை விட (11.9%) மது விற்பனை வளர்ச்சி (14.10%) அதிகமாக இருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.