திருப்பத்தூர் மாவட்டத்தில், இன்று (பிப்.14) நடைபெறும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் நடக்கும் இந்த மாநாட்டில் அவர் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிருந்தாவன் விரைவு ரயிலில் பயணித்தார்.
நன்றி: PT