பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று(மே.13) காலை தீர்ப்பு வழங்கினார். இதனிடையே தற்போது, அவர்களுக்கான தண்டனை விபரங்களை நீதிபதி வெளியிட்டார். அதன்படி, இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி