ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான 'மை லார்ட்' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அண்மையில் இயக்குநர் எச். வினோத் கலந்துகொண்டார். நிகழ்வில் அதில் பேசிய அவர், "இப்படத்தில் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற ஊடகவியலாளர்கள் வருவது போல் காட்டியுள்ளனர். உண்மையில் நான் இதுபோன்ற அரசியலை பேசினால் என்னை காப்பாற்ற யாரும் வரமாட்டீர்கள்" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.