மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பணியாற்றிய சி.வித்யாசாகர் ராவ், கடந்த 2016 செப்.2 முதல் 2017 அக்.5 வரை தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார். முன்னதாக, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து தமிழகத்தில் நிலவிய பரபரப்பான அரசியல் சூழலில், அரசமைப்பின்படி செயல்பட்டு புதிய அரசுகளை அமைப்பதற்கான பணிகளை சிறப்பாக வழிநடத்தினார்.