‘ஓம்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், நான் என்ன பேசினாலும் குறை சொல்லத்தான் செய்வார்கள், அதற்காகப் பேசாமல் இருக்க முடியாது. என் பெயரில் பல வதந்திகள் பரவுவதாகவும், என்னை யாரோ இயக்குவதாகக் கூறுவதாகவும் குறிப்பிட்ட அவர், என்னை இயக்குவது இறைவன், பின்னால் இருப்பது ரசிகர்கள், என் பக்கம் நிற்பது மக்கள்தான் எனக் கூறினார். மேலும் புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும் எனவும் தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு அரசியல் வருகை குறித்ததாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.