"எனக்கு கொள்கைதான் முக்கியம்".. கமல்ஹாசன் பேட்டி

“தமிழனாக நல்ல கருத்தை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன், என் கருத்தை மறுப்பவர்கள் விவாதிக்கட்டும்” என கமல்ஹாசன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (பிப்.6) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எனது கருத்தை மறுப்பவர்கள், அதனை விவாதித்து உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஜனநாயகம், இப்படி தான் இருக்கும். விவாதங்கள் தொடர வேண்டும்” என்றார். மேலும், “மொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி. கூட்டணியை விட எனக்கு கொள்கைதான் முக்கியம்” என தெரிவித்தார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி