"காமுகர்களாக மாறிய காவலர்கள்".. நயினார் நாகேந்திரன் ஆவேசம்

கோவையில் காவல் நிலைய அலுவலக அறையில் வைத்தே பெண் காவலரை மதுக்கரை சிறப்பு காவல்துறை கமாண்டண்ட் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையால் தெருதோறும் காமுகர்கள் பெருகி வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் காவல் அதிகாரிகளே காமுகர்களாக மாறிவருவது பெண்கள் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குறியாக்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி