திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே பெண் எல்.ஐ.சி. முகவரின் காருக்கு தீ வைத்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான காவலர் சத்தியராஜை மாவட்ட எஸ்.பி. ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். கணவனை இழந்த அந்த பெண்ணிடம் தவறான நோக்கத்தில் காவலர் பேசியதாகவும், அவரது செல்போன் அழைப்புகளை ஏற்காததால் ஆத்திரமடைந்து காருக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.