ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த போலீஸ்காரர் தற்கொலை

சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்த விஷ்வநாத் (27) பரங்கிமலை தண்டுமா நகரில் உள்ள தனது வாடகை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில், அவர் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததும், அதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இவருக்கு 1 மாதம் முன்புதான் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕