தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே தேரிப்பனையைச் சேர்ந்த காவலர் விக்ராந்த் என்பவரின் தாய் வசந்தா(70 வயது) நேற்று மர்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்தார். வீட்டிலிருந்த 8 சவரன் நகைகள் மாயமாகியிருந்ததால், வசந்தாவை கொன்றுவிட்டு மர்ம நபர்கள் கொள்ளை அடித்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த செல்வரதி (22) என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து நகைகளை மீட்ட போலீஸ் தொடர்ந்து விசாரிக்கிறது
நன்றி: PT