மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் போலீசாரால் சுட்டுப்பிடித்தனர். இதையடுத்து, அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.