உணவகத்தில் தகாத வார்த்தைகளால் ரகளை செய்த காவலர்.. வைரல் வீடியோ

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் உணவகம் செயல்பட்டதாக கூறி, காவலர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணியில் இருந்த காவலர் மோகன்குமார் என்பவர், கடையை மூடுமாறு வலியுறுத்தி உணவக உரிமையாளரிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர், கடையில் இருந்த உணவு பொருட்கள் மற்றும் தளவாடங்களை கீழே தள்ளிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

நன்றி:PT

தொடர்புடைய செய்தி