திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இளங்கோ என்ற காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவ.7-ம் தேதி ஆண் நண்பருடன் சென்னைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி, காவலர் இளங்கோவிடம் சிக்கியுள்ளார். அவர் மாணவியை காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறி, அங்கிருந்த ஒரு பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்று அத்துமீறியுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் இளங்கோவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:NewsTamil