சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு எஸ்பிளனேடு காவல் துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, கனிமொழி எம்.பி. ஆகியோர் இருந்தும் பேச்சைத் தடுக்கவில்லை எனத் தவெகவினர் குற்றம்சாட்டிய நிலையில், சுதா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முரளிதரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: PT