கர்நாடக மாநிலம் மணகுலியில் உள்ள கனரா வங்கியில், மே 23 முதல் 25 வரை விடுமுறை நாட்களில் ரூ.53.26 கோடி மதிப்புள்ள 59 கிலோ தங்கம் கொள்ளை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் சிசிடிவி, என்.வி.ஆர். யூனிட் மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்ற பாதுகாப்பு சாதனங்களை செயலிழக்க செய்துள்ளனர். மேலும், கருப்பு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்ததால் பதற்றம் ஏற்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.