கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், கஞ்சா வியபாரி நவீன் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட 20 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் நவீன் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கஞ்சா வழக்கில் நேற்று (நவ.22) நவீனை போலீசார் கைது செய்தனர். அப்போது, காவலர் ஐயப்பனை கஞ்சா வியாபாரி நவீன் வெட்டிவிட்டு, தப்ப முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
நன்றி: பாலிமர்