திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துச் சென்ற பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 30 மற்றும் 31 ஆகிய இரண்டு தினங்களில் கிரிவலம் முடித்துச் சென்ற இரண்டு பெண்களை மர்ம நபர்கள் காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதோடு, அவர்களின் தங்க நகைகளையும் பறித்துச் சென்றுள்ளனர். இதில் 8 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.