சென்னை வேளச்சேரியில் நேற்றிரவு (நவ., 24) பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம், ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்நபர் ஆபாச செயலில் ஈடுபட்ட போது, அங்கிருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்நபர் மீண்டும் அச்செயலில் ஈடுபட்டதால், சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுள்ளனர். கைதான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் உணவகம் ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது.