குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் இல்லத்தில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கல்குவாரிகளில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் வெட்டி எடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. இத்தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றன. தவெக அரசு பொறுப்பேற்றது முதல் திமுக மாஜி அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி: நியூஸ் 18