விசிக குறித்து ஆ. ராசா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நிலையில், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள ஆ.ராசாவின் இல்லம் முன்பு உதவி ஆய்வாளர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.