மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்., 27) வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15 கோடியே 81 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.