கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சொக்கலிங்கம் (54). இவர் நேற்று இரவு (மார்ச் 12) வ.உ.சி. மைதானத்தில் உள்ள புங்கை மரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து பந்தய சாலை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.