சமூக ஆர்வலரை தாக்கிய காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சமூக ஆர்வலரை தாக்கிய விவகாரத்தில் சென்னை ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில், தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வதை எதிர்த்து போராடிய பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஆர்வலரை தாக்கியதாக எழுந்த புகாரில் காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், தவெக எம்எல்ஏ விஜய் தாமுவிடம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி வாக்குவாதம் செய்த வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி