டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் குண்டு வெடித்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகே பொருத்தப்பட்ட சிசிடிவியின் காட்சிகளை சேகரிக்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். கார் வெடித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விரைகின்றனர்.