சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி விஜய் பிரசாரம் நடத்த தவெக 3 இடங்களில் அனுமதி கேட்டது. ஆனால், டிச.3 கார்த்திகை தீபம் மற்றும் டிச.6 பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், அந்த தினங்களைத் தவிர மற்ற தேதிகளில் அனுமதி வழங்க முடியுமென காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், மனுவில் மக்கள் கூட்ட எண்ணிக்கை குறிப்பிடப்படாததால், அதைத் தெளிவுபடுத்தினால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்