சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், கோயில் காவலாளி அஜித் குமார் கடந்த ஜூன் 28 அன்று போலீசாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். அவரது இறப்புச்சான்றிதழ் விஷயத்தில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, இறப்பு சான்றிதழை சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. குடும்பத்தினர் அஜித் குமாரின் இறப்புச்சான்றிதழை பெற காவல் நிலைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.