புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. வரும் வியாழக்கிழமை (ஜன., 01) புத்தாண்டையொட்டி, நட்சத்திர விடுதிகளுக்கு வரும் வாகனங்களை முறையாக சோதனையிட்டு பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா அமைக்கவும், அனுமதிக்கப்பட்ட அரங்கத்தில் மட்டுமே புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.